இலங்கை–இந்திய வர்த்தக உறவுகளை வலுப்படுத்த புதிய முயற்சி!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் முன்னணி வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கான விஜயத்தின்போது, இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு , உலகளாவிய பொருளாதார மற்றும் கலாசார உறவுகளுக்கான கூட்டமைப்பு மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் ஆகிய அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீடுகள், வர்த்தக ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், Expo 2027 கண்காட்சியில் பங்கேற்பதற்கும், இலங்கை வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கும் குறித்த அமைப்புகள் ஆர்வம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்புகள் மூலம் இலங்கைத் தொழில்முனைவோர் இந்தியச் சந்தைகளை அணுகுவதற்கும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார மாற்றப் பயணத்தை வலுப்படுத்துதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், ஏற்றுமதியை விரிவுபடுத்துதல் மற்றும் உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு சர்வதேசக் கூட்டாண்மைகள் முக்கியமானவை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்சந்திப்புகளை ஏற்பாடு செய்து, இரு நாடுகளினதும் வர்த்தக சமூகங்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவிய இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹேஷினி கொலொன்னே மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வர்த்தக நிறுவனங்களை சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் அவற்றின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.