விமான நிலையத்தில் பெருமளவு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

#SriLanka #ARREST #Airport #LANKA4 #Foriegn #Katunayaka
Mahathi
1 day ago
விமான நிலையத்தில் பெருமளவு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 58.5 இலட்சம் ரூபா பெறுமதியான 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 38 மற்றும் 41 வயதுடைய இரு வெளிநாட்டுப் பிரஜைகள் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள பசுமை வழித்தடத்தின் ஊடாகச் சென்றுகொண்டிருந்தபோதே குறித்த இருவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணையில், இருவரும் வணிக நிறுவன ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், AK 47 என்ற விமான சேவையின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவர்கள் கொண்டுவந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 195 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சுங்கத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் அனைத்தையும் அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!