தென்னை விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டு யானைகள்: தேங்காய் விலை உயரும் அச்சத்தில் மக்கள்!

#SriLanka #prices #Attack #Elephant #Coconut #Tree #LANKA4
Abi
1 hour ago
தென்னை விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டு யானைகள்: தேங்காய் விலை உயரும் அச்சத்தில் மக்கள்!

அநுராதபுரம், தம்புத்தேகம – நியாதவல பகுதியில் மனித–யானை மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று இரவு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் சுமார் 20 தென்னை மரங்களையும் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளன.

குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார யானை வேலிகள் முறையாகப் பராமரிக்கப்படாததே காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைவதற்குக் காரணம் எனப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய அளவில் காய்த்து வந்த தென்னை மரங்கள் அழிக்கப்படுவதால், எதிர்காலத்தில் தேங்காய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ‘மெஹெவரக் அபே’ அமைப்பின் அஜித் ஜயவர்தன, யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் யானைகளுக்கும் நியாயம் கிடைப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அருகிலுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அரசாங்கத்துக்குச் சொந்தமான ‘நீரவிய பண்ணை’ மூடப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அமைப்பின் தலைவர் மற்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!