அவசரப் பாதுகாப்பு நடவடிக்கை: ஆபத்தான இரசாயனக் கொள்கலன்களைக் கைப்பற்றிய அதிகாரிகள்!
#SriLanka
#Colombo
#LANKA4
#Emergancy
#Safety
Abi
1 hour ago
பாதுகாப்பு அமைச்சின் ஊடாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிக செறிவுள்ள நைட்ரிக் அமிலம் அடங்கிய ஐந்து கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா, குறித்த அமிலத் தொகுதியால் ஏற்பட்டிருந்த ஆபத்தான நிலைமை தற்போது 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், எஞ்சியுள்ள நடவடிக்கைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் (MEPA) இணைந்து முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.