காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளைக் குறைக்க WHO பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

#SriLanka #PrimeMinister #Health #LANKA4 #Climate #Changes #discussion #Harini Amarasooriya
Abi
2 hours ago
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளைக் குறைக்க WHO பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

உலக சுகாதார அமைப்பின் (WHO) பிரதிநிதிகள் குழுவினருக்கும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சுகாதார மற்றும் சமூக ரீதியிலான தாக்கங்களைக் குறைப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின் ஆயத்த நிலையைப் பலப்படுத்துதல், மக்களின் நல்வாழ்வை உறுதி செய்தல் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கல்வியும் சுகாதாரமும் அரசாங்கத்தின் முன்னுரிமைகளாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், இளம் சந்ததியினரின் மனநலத்தைப் பாதுகாத்தல், முதியோர் சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுத்தல் போன்ற சமூக சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதே நோக்கமாகும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும், சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அனைத்து மக்களினதும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!