பாகிஸ்தானில் சாலை விபத்தில் 13 பேர் மரணம் - 21 பேர் காயம்
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் உத்தால் மாவட்டத்தில், கராச்சி நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று, உள்ளூர் பயணிகளை ஏற்றிச் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
"விபத்து மிகவும் பயங்கரமாக இருந்ததால், விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிரிழந்தனர்".
இந்நிலையில், காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் போக்குவரத்து விதிகள் முறையாக அமல்படுத்தப்படாமை, அதிவேகம், மோசமான சாலைப் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டுதல் ஆகியவற்றால் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன குறிப்பிடத்தக்கது.