இந்தியா-நேபாள எல்லையில் 3 இலங்கையர்கள் உட்பட 4 பேர் கைது
இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில், மூன்று இலங்கை நாட்டவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரை இந்தியாவின் 'சஷாஸ்த்ர சீமா பல்' (SSB) படையினர் தடுத்து நிறுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குழுவினர், காடு வழியாக நேபாளத்திற்குச் செல்ல முயன்றபோது பாதுகாப்புப் படையினரால் பிடிபட்டனர்.
அதிகாரிகளின் ஆரம்பகட்ட தகவல்படி, இவர்கள் நால்வரும் ஆட்டோ ரிக்ஷா மூலம் எல்லைப் பகுதிக்கு வந்துள்ளனர்; அங்கு அவர்கள் நேபாளத்திற்குச் செல்லும் வழியை விசாரித்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.
விசாரணையின்போது, அந்த மூன்று இலங்கை நாட்டவர்களுக்கும் சொந்தமான கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்டுகள்) கண்டெடுக்கப்பட்டன.
இந்த கடவுச்சீட்டுகளுடன் இணைக்கப்பட்ட விசாக்களின் காலம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை நாட்டவர்கள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அஜித் குமார் (39), கௌசல்யா (38) மற்றும் பிரபாப் (38) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நான்காவது நபர், தமிழ்நாட்டைச் சேர்ந்த தரம் சுதாகர் (35) என்ற பெண் ஆவார்.