பிரான்சில் ஷமோண்டா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் நபர் கண்டுபிடிப்பு
பிரான்சில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் உயிரிழந்த நோயாளி ஒருவரிடம், மனிதர்களுக்கு ஏற்படும் 'ஷமோண்டா வைரஸ்' (Shamonda virus - Shav) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது "மிகவும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட அசாதாரணமான நிகழ்வு" என்றும் பொதுமக்களுக்கு தற்போது எந்த ஆபத்தும் இல்லை என்றும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
'ஷாவ்' (Shav) என்பது முதன்மையாக கால்நடைகளை பாதிக்கும் ஒரு நோயாகும்; இது பாதிக்கப்பட்ட ஈக்கள் (midges) மூலம் பரவுகிறது.
ஆடுகள், செம்மறி ஆடுகள், அல்பாகாக்கள் மற்றும் குதிரைகளிடமும் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் மனிதர்களுக்கு இது பரவியதாக இதற்கு முன்பு பதிவுகள் இல்லை.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) ஆகியவை இந்தச் சூழலைக் கண்காணித்து வருகின்றன.
இந்த வைரஸ் மனிதருக்கு எவ்வாறு பரவியது என்பது குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிழக்கு பிரான்சில் ஈ கடித்ததன் மூலமே அந்த நோயாளிக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிரான்சின் சுகாதார மற்றும் வேளாண் அமைச்சகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அந்தப் பகுதியில்தான் முதன்முதலில் விலங்குகளிடையே இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.