மழைக்கால இடர்பாடுகளைக் குறைக்க மாணவர்களுக்கு உதவி!

#SriLanka #School #Rain #Event #LANKA4 #students
Abi
1 hour ago
மழைக்கால இடர்பாடுகளைக் குறைக்க மாணவர்களுக்கு உதவி!

மழைக்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடரும் நோக்கில், விசுவமடு பகுதியில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புதிய கிராம மக்கள் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் வே. கரிகாலனின் ஒழுங்குபடுத்தலில், நேற்று (22) விசுவமடு அட்டைக்குள சிறுவர் பூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அமெரிக்காவில் மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வரும் சக்தி பவுண்டேஷன் அமைப்பின் தலைவி இந்திராணி நித்தியானந்தனின் நிதிப் பங்களிப்புடன், மாணவர்களுக்கு இந்த மழைக்கவசங்கள் வழங்கப்பட்டன.

மழைக்காலத்தில் பாடசாலைக்குச் செல்வதிலும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் வே. கரிகாலன், புதிய கிராம மக்கள் மகளிர் அணியின் பிரதேச இணைப்பாளர் தீபன் அனஸ்ரியா, தேராவில் தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள், மகளிர் அணியினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!