பாப்பரசர் லியோவின் உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கை

#Medical #LANKA4 #Surgery #Vatican #Pope #L4
Prasu
1 hour ago
பாப்பரசர் லியோவின் உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கை

போப் லியோ XIVன் நுரையீரலில் இருந்த ஒரு கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு மேலதிக சிகிச்சை தேவைப்படாது என்று அவரது மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

அகற்றப்பட்ட கட்டி நுரையீரல் அடினோகார்சினோமா என்றும் அந்த நோய் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இருந்தது என்றும் மருத்துவர்கள் ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தனர்.

போப் தனது நுரையீரலில் இருந்த ஒரு கட்டியை அகற்றுவதற்காக, அக்டோபர் 13 அன்று ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

90 நிமிடங்கள் நீடித்த அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவும் வீடியோ உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது நுரையீரலின் கீழ் மடல் அகற்றப்பட்டதாகவும் வத்திக்கான் குறிப்பிட்டது.

அவர் சனிக்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் குணமடைவதற்காக, வத்திக்கான் முன்னதாக அக்டோபர் 20 வரை அவரது நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!