சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!
சத்துருக்கொண்டான் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், இந்த சம்பவம் 37 ஆண்டுகள் பழமையானது. முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு முறைப்பாடாளருக்கு பொலிஸார் பலமுறை அழைப்பு விடுத்தும் அவர் குறித்த காலப்பகுதியில் முன்னிலையாகவில்லை.
அவ்வாறான நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாட்டாளரை தேடிச் சென்று, வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளார்.அதற்கமைய விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
அதேநேரம் பல ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற இவ்வாறான படுகொலை சம்பவங்கள் குறித்த துல்லியமான தரவுகள் கிடைக்கப்பெறாத நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் அவ்வாறான தகவல்கள் திரட்டப்படுகின்றன. அதற்கமைய உரிய விசாரணைகள் எதிர்வரும் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.