191 கொலைகளை செய்த கென்ய மதத் குழுத் தலைவர் குற்றவாளி என தீர்ப்பு
தன்னைத்தானே கென்ய மத போதகர் என்று கூறிக்கொண்ட ஒருவரும், அவரது கூட்டாளிகளும், ஒரு மோசமான பட்டினி வழிபாட்டுக் குழுவில் 190 குழந்தைகளையும் ஒரு பெரியவரையும் கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
கென்யாவின் மலிண்டி கடற்கரை ரிசார்ட்டின் உட்பகுதியில் உள்ள அந்த வழிபாட்டுக் குழுவின் தளத்தில், 2023ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தன்னைத்தானே போதகர் என்று கூறிக்கொண்ட பால் மெக்கன்சி, "இயேசுவைச் சந்திப்பதற்காக" தனது சீடர்களைப் பட்டினி கிடந்து சாகும்படி தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
மொம்பாசாவில் உள்ள திறந்தவெளி நீதிமன்றத்தில், அவரும் மேலும் 28 பேரும் கொலைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
"190 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவரைக் கொலை செய்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்ட 29 நபர்களுக்கும் எதிரான வழக்கை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது என்பதில் நான் திருப்தி அடைகிறேன்," என்று நீதிபதி டயானா கவேட்சா மோச்சாச்சே குறிப்பிட்டுள்ளார்.