எகிப்தில் சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்து - 13 பேர் மரணம்
#Death
#Accident
#Hospital
#Bus
#LANKA4
#Rescue
#Egypt
#L4
Prasu
1 day ago
எகிப்தின் தலைநகருக்கு மேற்கே, சுற்றுலாப் பேருந்து ஒன்றின் மீது பெரிய லாரி ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 34 பேர் காயமடைந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கெய்ரோ-அஸ்யூட் மேற்குப் பாலைவனச் சாலையிலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் கிசாவில் (Giza) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்தின் அரசு புள்ளிவிவர முகமையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் சுமார் 6,000 பேர் உயிரிழந்துள்ளனர்.