வளிமண்டலக் குழப்பநிலை - நாட்டின் பல பகுதிகளில் 100MM மழைவீழ்ச்சி பதிவாகும்!

#SriLanka #weather #Rain #Department of Meteorology
Thamilini
2 hours ago
வளிமண்டலக் குழப்பநிலை - நாட்டின் பல பகுதிகளில் 100MM மழைவீழ்ச்சி பதிவாகும்!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, இன்று மாலை (20) முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை தீவிரமடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அறிவிப்பிற்கு அமைய,  இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மேல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

 அதேபோல் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!