ஞானசார தேரர் விவகாரம் - நீதித்துறையை தேவைக்கு ஏற்பட மாற்ற முடியாது என்கிறார் சுனில் வட்டகல!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதி நீதித்துறையை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சியினர் தற்போது நீதிமன்ற தீர்ப்புக்கு அப்பாற்பட்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கிறார்கள்.
இவர்களை போல் நீதித்துறையை தேவைக்கு ஏற்ப எம்மால் பயன்படுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (19) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் நீதித்துறை இல்லாதொழியும், ஜனாதிபதி நீதித்துறையை ஆக்கிரமித்து தனக்கு ஏற்றாட்போல் தன்னிச்சையாக செயற்படுவார் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினார்கள்.
ஆனால் தற்போது நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக ஞானசாரsuni தேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கிறார்கள்.
எதிர்க்கட்சியினரை போன்று எம்மால் நீதித்துறையை தேவைக்கேற்ப பயன்படுத்த முடியாது. நீதித்துறைக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை அனைவரும் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும்.
கடந்த கால ஆட்சியாளர்கள் நீதித்துறைக்கு எதிராக நிறைவேற்றுத்துறையை பயன்படுத்தினார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார படுகொலையாளியாகவும்,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பு மீறல் குற்றவாளியாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடிப்படை உரிமை மீறல் குற்றவாளியாகவும் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலைக்கு தற்போதைய ஜனாதிபதி ஒருபோதும் செல்லமாட்டார் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம்” என்றார்.