விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சரத் பொன்சேகா

#Namal Rajapaksha #Sarath Fonseka #LANKA4 #Gold #LTTE #L4
Prasu
3 hours ago
விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சரத் பொன்சேகா

இராணுவத்தளபதியாக இருந்த காலத்தில் போரின் போது விடுதலைப்புலிகள் அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் தொடர்பில் சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து சுமார் 220 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. ஆனால், பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச110 கிலோ தங்கம் என்றே குறிப்பிட்டிருந்தார்.

நான் இராணுவத்தை விட்டு வெளியேறிய பின்னரும் தங்கம் மீட்கப்பட்டுள்ளது. அப்படியானால், தமிழீழ விடுதலை புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தில் ஒரு பெரும் பகுதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

11 மாணவர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

11 மாணவர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவமானது மிகவும் பாரதூரமான குற்றமாகும். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

தான் திருகோணமலை கடற்படை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தபோது, கடத்தப்பட்ட மாணவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால் தான் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சின்னையாவை வெறும் ஒரு மாத காலப் பகுதிக்குள்ளேயே கடற்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கினார் என்று பொன்சேகா குற்றஞ்சாட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!