மறைந்த தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்
#TamilCinema
#Director
#LANKA4
#Music
#Singer
#condolence
#AR Rahman
#L4
Prasu
7 hours ago
தமிழ் திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமானவர் தேனிசை தென்றல் தேவா காலமானார்.
76 வயதான தேவாவுக்கு காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மறைந்த தேவா அவர்களுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் பதிவில், நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.