அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ள தேனிசை தென்றல் தேவாவின் உடல்
#Death
#Tamil Nadu
#TamilCinema
#LANKA4
#ChiefMinister
#Singer
#L4
Prasu
10 hours ago
தமிழ் திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளரும் பாடகருமானவர் தேனிசை தென்றல் தேவா இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
76 வயதான தேவாவுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தேவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவா வீட்டிற்கு நேரில் வந்த முதலமைச்சர் விஜய் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக, தேவா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.