தேசிய சுற்றுலா மையமாக மாறும் நுவரெலியா வரலாற்று அஞ்சல் நிலையம்!
#SriLanka
#NuwaraEliya
#LANKA4
#Office
#Tourism
#historic
Abi
1 day ago
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள நுவரெலியா வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் நிலையக் கட்டிடத்தைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டிடத்தின் வரலாற்று அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக, அஞ்சல் திணைக்களத்தின் தலைமை அதிகாரி ருவன் சத்துகுமார உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழு அண்மையில் கள விஜயமொன்றை மேற்கொண்டது.
இலங்கை கடற்படை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் கட்டிடத் திணைக்களம் ஆகியன இணைந்து இப்புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.