கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து விபத்து - 12 பேர் வைத்தியசாலையில்

#SriLanka #Colombo #Accident #Anuradapura #Bus
Thamilini
1 day ago
கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து  விபத்து - 12 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்று, நேற்று இரவு (16) புத்தளம் – அனுராதபுரம் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த பேருந்து மீ ஓயா பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த விபத்தில் ஏழு பெண்கள், ஒரு சிறுமி மற்றும் நான்கு ஆண்கள் சிறு காயங்களுக்குள்ளாகி, சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேருந்தின் சாரதியும் நடத்துனரும் காயமடைந்தவர்களில் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

 இந்த விபத்து குறித்து புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!