மெக்சிகோவில் கடலில் தத்தளித்த 16 பேரை மீட்ட அமெரிக்க அதிகாரிகள்
#America
#people
#Mexico
#LANKA4
#Rescue
#Missing
#Sea
#L4
Prasu
1 day ago
மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால், பசிபிக் பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த குறைந்தது 16 பேர் மீட்கப்பட்டனர்.
மேலும் சிலரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
என்செனாடாவிற்கு மேற்கே சுமார் 140 மைல் தொலைவில் சிலர் கடலில் மிதந்துகொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் ஏன் கடலில் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அங்கு எந்தப் படகும் காணப்படவில்லை என்றும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவர், தாங்கள் மொத்தம் 27 பேர் ஒரு படகில் பயணம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீட்கப்பட்டவர்கள் சான் டியாகோவில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.