நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பார்வையில் நடிப்பு அரக்கி யார்?

#Actor #Actress #TamilCinema #LANKA4 #Movie #L4
Prasu
1 hour ago
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் பார்வையில் நடிப்பு அரக்கி யார்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், இந்தியாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ‘நடிப்பு அரக்கி’ எனக் கருதும் நடிகை யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகை மமிதா பைஜு மற்றும் இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோரைக் குறிப்பிட்டார்.

மமிதா பைஜு சமீபகாலமாகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதாகப் பாராட்டிய அவர், வட இந்தியாவில் ஆலியா பட் சிறந்த நடிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான மமிதா பைஜு, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ ‘ஜன நாயகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துக் கவனம் ஈர்த்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!