400 குடும்பங்களைத் தத்தெடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா

#India #Actress #TamilCinema #LANKA4 #Adopt #L4
Prasu
2 hours ago
400 குடும்பங்களைத் தத்தெடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா

தொடர்ச்சியான திரைப்படத் திட்டங்களில் வேலையாக இருக்கும் பன்மொழி நடிகை ராஷ்மிகா மந்தன்னா, தனது சமூக சேவை முயற்சி ஒன்றின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

'ரணபாலி' (Ranabaali) திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள ராஷ்மிகா, இப்படம் வெளியாவதற்கு முன்னதாக, தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவும் தனது முயற்சி குறித்துப் பேசியுள்ளார்.

அதன்படி, 400 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ள ராஷ்மிகா, அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள அவர், சிறிய அளவிலான நற்செயல்கள் கூட மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலேயே இந்த முயற்சி குறித்துப் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"திரைப்படங்களில் நடிகர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள், நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

'ரணபாலி' படத்தில் நான் நடித்த 'ஜெயம்மா' என்ற கதாபாத்திரத்திற்கும் எனக்கும் என்ன ஒற்றுமை என்று பலர் கேட்கிறார்கள்; அந்த ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. முன்னதாக, இதுபோன்ற உதவிகளை நான் பகிரங்கமாகப் பேசுவதில்லை. 

ஆனால், எனது இந்த முயற்சி உங்களில் சிலருக்காவது நல்ல காரியங்களைச் செய்ய ஊக்கமளித்தால், நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்," என்று ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!