பாகிஸ்தான் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 34 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மரணம்

#Death #Pakistan #LANKA4 #students #Building #Teacher #collapse #L4
Prasu
3 hours ago
பாகிஸ்தான் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 34 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மரணம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில், தனியார் பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 34 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெஷாவர் நகரத்தின் நெரிசலான உட்பகுதியான 'திர் காலனி'பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக, பெஷாவர் நகரக் காவல் துறைத் தலைவர் மியான் சயீத் தெரிவித்தார்.

'அல்-கைர்' பள்ளியின் மேல் தளத்தில் இருந்த வகுப்பறைகளில் 30 மாணவர்கள் இருந்தபோது இந்த மேற்கூரை இடிந்து விழுந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இந்தப் பள்ளியை நடத்தி வந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் மூன்று அடுக்கு மாடி கொண்ட அந்த கட்டிடத்தின் மேற்கூரை மிகவும் மோசமான தரத்தில் கட்டப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்த 20 குழந்தைகள் லேடி ரீடிங் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் ஆசிம் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!