இன்றைய வானிலை - நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 MM மழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #Department of Meteorology
Thamilini
1 hour ago
இன்றைய வானிலை - நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 MM மழை பெய்யும்!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று  பிற்பகல் 1 மணிக்கு மேல் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 சபரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். 

சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!