மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

#SriLanka #NorthernProvince #Governor #LANKA4 #Award #Disabled persons #L4
Prasu
2 hours ago
மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இன்று மாகாண மட்டத்தில் சாதிக்கும் நீங்கள், நாளை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களிலும் சாதனை படைக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.

images/content-image/1791971964.jpg

நிகழ்வுக்கு வருகை தந்த விருந்தினர்கள், மாற்றுத்திறனாளிகளின் இசைக்குழு அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடி, மாகாணக் கொடி மற்றும் மாவட்டக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. 

பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.

கடந்த 9ம் திகதியும் இன்றைய தினமும் இணைந்து மொத்தம் 157 வகையான போட்டிகள் நடைபெற்றன. இன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களை ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் வழங்கிக் கௌரவித்தனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆண்டு எமது மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாண்டு இரண்டாவது ஆண்டாக இப்போட்டிகள் நடைபெறுகின்றன. 

images/content-image/1791972001.jpg

இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை உங்களுக்காக ஏற்பாடு செய்வது எமது கடமையாகும். இப்போட்டிகளில் நீங்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றதை அவதானிக்க முடிந்தது. உங்களுடைய திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். 

இன்று மாகாண மட்டப் போட்டிகளில் பங்கேற்றுள்ள நீங்கள், நாளை தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிகளைப் பதிவுசெய்யும் வகையில் உங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

images/content-image/1791972059.jpg

உங்களுடைய திறமைகளை மேம்படுத்துவதற்கும், உங்களின் சாதனைப் பயணத்துக்கும் தேவையான உதவிகளை வழங்க மாகாண நிர்வாகம் தயாராக இருக்கின்றது என்றார்.

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலர், யாழ்ப்பாணம் பிரதேச செயலர், வடக்கு மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!