தேசிய வாசிப்பு மாதம் 2026: நாவிதன்வெளி பிரதேச சபையால் மாணவர்களுக்கான போட்டிகள் ஏற்பாடு!

#SriLanka #Student #LANKA4 #competition #PradeshiyaSabha #Speech
Riya
2 hours ago
தேசிய வாசிப்பு மாதம் 2026: நாவிதன்வெளி பிரதேச சபையால் மாணவர்களுக்கான போட்டிகள் ஏற்பாடு!

“வாழ்நாள் முழுவதும் எழுத்தே நண்பன்” எனும் தொனிப்பொருளில், தேசிய வாசிப்பு மாதம் – 2026ஐ முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி நாவிதன்வெளி பிரதேச சபை நூலக மண்டபத்தில் மாணவர்களுக்கான வாசிப்புத்திறன் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளை நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் திரு. I. ரூபசாந்தன் தலைமையுரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.

மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், மொழித்திறனை மேம்படுத்துதல், சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல், படைப்பாற்றலை வெளிப்படுத்துதல் மற்றும் மேடையில் தன்னம்பிக்கையுடன் பேசும் திறனை விருத்தி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே வலியுறுத்துவதும் இந்நிகழ்வுகளின் முக்கிய நோக்கமாகும்.

இப்போட்டிகளுக்கான நடுவர்களாக ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கண. வரதராஜன், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. ஜெ. டேவிட் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திரு. கே. சாந்தகுமார் ஆகியோர் பணியாற்றினர்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டிகளின் அடுத்த கட்டமாக, எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி காலை 9.00 மணி முதல் விவாதப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இப்போட்டிகள் மாணவர்களின் அறிவாற்றல், கருத்துத் தெளிவு, தர்க்கரீதியான சிந்தனை மற்றும் ஆதாரங்களுடன் கருத்துக்களை முன்வைக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, சமூகத்தில் வாசிப்புக் கலாசாரத்தை வலுப்படுத்தவும் இத்தகைய நிகழ்வுகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!