இலங்கையின் மொத்த சனத்தொகையில் 18வீதம் முதியோர் – நலத்திட்டங்கள் விரிவாக்கம்!

#SriLanka #Development #Elder #Minister #LANKA4 #population
Riya
2 hours ago
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 18வீதம் முதியோர் – நலத்திட்டங்கள் விரிவாக்கம்!

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களின் எண்ணிக்கை 3,921,124 ஆக அதிகரித்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் தரவுகளின்படி, முதியோர் மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதமாகக் காணப்படுகின்றது.

இவர்களில் 1,712,535 பேர் ஆண்களாகவும், 2,208,589 பேர் பெண்களாகவும் உள்ளனர். 

இதற்கமைய, முதியோர் மக்கள் தொகையில் 43.67 சதவீதமானோர் ஆண்களாகவும், 56.33 சதவீதமானோர் பெண்களாகவும் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2000ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ், 2002ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தேசிய முதியோர் செயலகமும் தேசிய முதியோர் சபையும் நிறுவப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அவர்களின் நலனை உறுதிப்படுத்துதல், தேவையான சேவைகளை வழங்குதல், முதியோர் பராமரிப்பு நிலையங்களைப் பதிவு செய்து ஒழுங்குபடுத்துதல், முதியோர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு உதவிகளை வழங்குதல் மற்றும் முதியோர் குழுக்களை வலுவூட்டுதல் ஆகிய பணிகளை இந்த நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.

மேலும், 2025ஆம் ஆண்டில் 44,899 முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டில் 45,000 அடையாள அட்டைகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2026ஆம் ஆண்டில் 25 முதியோர் இல்லங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும், 500 பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!