அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று பயணிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்

#SriLanka #Account #Aswesuma
Thamilini
2 hours ago
அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்று பயணிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்

'அஸ்வெசும'  திட்டத்தின் கீழ், 2026 அக்டோபர் மாதத்திற்கான நலன்புரி உதவிகள் இன்று (14) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளன. 

 இதன்படி, இத்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளிக்குடும்பங்களுக்கு மொத்தம் 9.12 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. 

 அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,445 பயனாளிக்குடும்பங்களுக்கு 2.04 பில்லியன் ரூபா வரவு வைக்கப்படவுள்ளது. மொத்தத்தில், இவ்விரு கட்டங்களின் ஊடாகவும் 1,197,728 பயனாளிக்குடும்பங்களுக்கு 11.16 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது. 

 சம்பந்தப்பட்ட பயனாளிகள் இன்று முதல் தங்கள் 'அஸ்வெசும' வங்கிக் கணக்குகள் ஊடாக இத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!