இலங்கையில் இருந்து யானையின் சாணத்தை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டுச் சென்ற பயணி தடுத்து நிறுத்தம்!

#SriLanka #Australia #Elephant
Thamilini
2 hours ago
இலங்கையில் இருந்து யானையின் சாணத்தை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டுச் சென்ற பயணி தடுத்து நிறுத்தம்!

இலங்கையிலிருந்து அசாதாரணமான நினைவுப் பொருட்களைக் கொண்டு வந்த பயணி ஒருவரை  ஆஸ்திரேலியா தடுத்து நிறுத்தியுள்ளது. 

குறித்த பயணி யானைச் சாணத்தால் செய்யப்பட்ட குளிர்சாதனப்பெட்டி காந்தங்களை நாட்டிற்குள் கொண்டுச் செல்ல முற்பட்டபோது  ஆஸ்திரேலிய உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் காரணம் காட்டி,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

விலங்குகளின் கழிவுப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், பூச்சிப்புழுக்கள் மற்றும் களை விதைகள் இருக்கலாம் என்றும், அவை கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாகவும், ஆக்கிரமிப்புத் தாவரங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனர். 

அந்தக் காந்தங்கள் நினைவுப் பொருட்களாக விற்கப்பட்டாலும், உயிரியல் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இதுபோன்ற பொருட்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வாங்கப்பட்ட நினைவுப் பொருட்கள் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை சர்வதேசப் பயணிகளுக்கு நினைவூட்டுவதற்காக அதிகாரிகள் இந்தச் சம்பவத்தைப் எடுத்துக்கூறியுள்ளனர்.

விலங்குகள் சார்ந்த பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு இறக்குமதி விதிமுறைகளைச் சரிபார்க்குமாறு அவர்கள் பயணிகளை வலியுறுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!