ஏமன் மக்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய வேண்டுகோள் விடுத்த சவுதி
#people
#Attack
#LANKA4
#Warning
#saudi
#Yemen
#Houthi
#L4
Prasu
2 hours ago
ஹூதிகளின் எரிபொருள் கையிருப்பை இன்றுலிருந்து தீக்கிரையாக்கப்போவதாக சவுதி படைகள் சபதம் எடுத்துள்ளது.
ஏமன் தலைநகர் சனாவின் எரிபொருள் தளங்களுகு அருகில் பொதுமக்களை இருக்கவேண்டாம் என்றும் அங்கிருந்து உடனடியாக வெளியேறி வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் சவுதி படைகள் ஏமன் மக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு சில மணிநேரங்களின் பின்னர் தலைநகர் சானாவில் அமைந்திருந்த எண்ணை குதம்மீது சவுதி படைகள் வான்வழி தாக்குதலை நடத்தி அந்த எண்ணை குதத்தை முழுமையாக அழித்துள்ளனர்.
இன்றிலிருந்து சவுதிக்கும் ஏமனுக்கும் இடையில் பெரும்போர் நடைபெறப்போவதற்கான அறிகுறியாக இந்த தாக்குதலை நாம் எடுத்துக்கொள்ளமுடியும்.