யால தேசிய பூங்காவின் முதலாம், இரண்டாம் வலயங்கள் மீண்டும் திறப்பு!
#SriLanka
#LANKA4
#Yala
#National Park
#Reopen
#Tourism
Abi
10 hours ago
வறட்சியான காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் முதலாம் மற்றும் இரண்டாம் வலயங்கள், எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், பூங்காவின் வீதிகளைப் புனரமைப்பதற்கும் கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் இந்த வலயங்களுக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பூங்கா மீண்டும் திறக்கப்படுவதைத் தொடர்ந்து, அங்குள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம் தங்குமிடங்களுக்கான முன்பதிவு வசதிகள் நவம்பர் 1ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.