'கிரிஷ் ஒப்பந்த வழக்கு - நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை!
#SriLanka
#Namal Rajapaksha
#Court
Thamilini
1 day ago
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் காரணமாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக, சிறைச்சாலை அதிகாரிகளால் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.