ஆசிரியர்கள் உள்பட பொதுத் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அரசாங்கம் தீர்மானம்!

#SriLanka #doctor #Salary #AnuraKumaraDissanayake #Teacher
Thamilini
2 hours ago
ஆசிரியர்கள் உள்பட பொதுத் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அரசாங்கம் தீர்மானம்!

ஜனவரி 2027-இல் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம் மீண்டும் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.ஷ

அதன்படி ஆசிரியர்களின் ஆரம்ப ஊதியம் 65,000 ரூபாயாகவும் மருத்துவர்களின் ஆரம்ப ஊதியம் 94,000 ரூபாயாகவும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகவெரட்டியவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தனது அரசாங்கத்தின் முதல் வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றொரு ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அரசாங்க சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் பொதுச் சேவையை வலுப்படுத்துவது அவசியமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உட்பட 121,000 புதிய பொதுத்துறை ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதற்கான திட்டங்களையும் ஜனாதிபதி அறிவித்தார்.

அரசியல் ரீதியான நியமனங்களுக்குப் பதிலாக, பரீட்சைகள் மற்றும் நேர்காணல்கள் மூலமாகவே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

கிராம உத்தியோகத்தர்கள், பிரிவெனா நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் ஜனாதிபதி திஸாநாயக்க அறிவித்தார். 

 நாட்டின் அபிவிருத்திக்கு வலுவான மற்றும் திறமையான பொதுச் சேவை இன்றியமையாதது என்பதை அவர் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!