கச்சத்தீவு ஒப்பந்தங்களை மாற்றும் திட்டமில்லை - இந்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் உறுதி

#India #SriLanka #LANKA4 #kachchaitheevu #Agreement #L4
Prasu
2 hours ago
கச்சத்தீவு ஒப்பந்தங்களை மாற்றும் திட்டமில்லை - இந்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் உறுதி

கச்சத்தீவு தொடர்பாக 1974 ஆம் ஆண்டு இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் 1976 ஆம் ஆண்டு இலங்கை கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை கட்டுப்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகியவற்றை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, இந்திய அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் (Attorney General) தமது நிலப்பாட்டை உயர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, குறித்த ஒப்பந்தங்களைத் திருத்துவதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ இந்திய அரசு எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய மீனவர்கள் இலங்கையின் வட கடல் பகுதிக்குள் நுழைவது குறித்து இந்திய அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணன் தனது கவலையையும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்குட்பட்ட கடல் எல்லையில் மீன் வளம் குறைவாக இருப்பதே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய வேண்டாம் என இந்திய மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!