அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிய புதிய நடவடிக்கை!
#SriLanka
#Department
#LANKA4
#Smoke
#vehicle
Riya
2 hours ago
அதிகளவில் புகையை வெளியேற்றி சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக விசேட பிரிவொன்றை நிறுவ மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் ஊடாக புகை வெளியேற்றத்தைக் கண்காணித்து, வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.