கறுப்பு ஜுலை கலவரம் - நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதே சிறந்தது : நீதியமைச்சர் யோசனை

#SriLanka #Parliament #Harshana Nanayakkara
Thamilini
1 hour ago
கறுப்பு ஜுலை கலவரம் - நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதே சிறந்தது : நீதியமைச்சர் யோசனை

கறுப்பு ஜுலை சம்பவம் தொடர்பில் ஆராய்வற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற யோசனைக்கு எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.ஏனெனில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை காட்டிலும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது சிறந்ததாக அமையும் என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நாட்டில் யாரும் சிறுபான்மையினத்தவர்கள் அல்ல, இனத்தாலும்,பிறப்பாலும் ஒருவரை சிறுபான்மை என்று குறிப்பிடுவது மனித குலத்துக்கு எதிரானது.இந்த நாட்டில் சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மத்தியிலும் கோபமும்,வெறுப்பும் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இதற்கு வரலாற்று ரீதியிலான தவறுகள் பிரதான காரணியாக காணப்படுகின்ற என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்காகவே செல்வம் அடைக்கலநாதன் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார். இதற்கு இணையாக பிறிதொரு யோசனை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.  இதற்கமைய பாராளுமன்ற செயற்குழு ஒன்றை நியமிக்க முடியும். 

நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும்  செயற்குழுவில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவார்கள். பரிந்துரைகளை அனைவரும் ஒன்றிணைந்து தயாரிக்கலாம். சட்டங்களை திருத்தம் செய்ய ஒன்றிணைந்து செயற்படலாம்.இதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

ஏனெனில் ஜனாதிபதி ஆணைக்குழுவை காட்டிலும் பாராளுமன்ற செயற்குழுவை அமைப்பது வெளிப்படைத்தன்மையானதாக அமையும் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!