அனோஜனின் உடல்நிலைக் குறித்து வெளியான தகவல் - தம்மாம் சிறைச்சாலையில் நேரில் சந்தித்த தூதர்

#SriLanka #Health #Prison #SaudiArabia #SivarasaAnojan
Thamilini
1 hour ago
அனோஜனின் உடல்நிலைக் குறித்து வெளியான தகவல் - தம்மாம் சிறைச்சாலையில் நேரில் சந்தித்த தூதர்

சவூதி அரேபியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதர்  ஓ.எல். அமீர் அஜ்வாட், நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இதன்போது அவரின் உடல்நிலை குறித்து தூதுவர் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தப் பயணத்தின்போது தூதர், அனோஜனுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம்  அறிக்கையொன்றில்  தெரிவித்துள்ளது.

அவரது தேவைகளுக்கும், அவர் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், அனோஜனுக்குத் தேவையான அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்கத் தூதரகம் உறுதிபூண்டுள்ளதாகவும் தூதர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் நேரடித் தொடர்பை எளிதாக்கும் வகையில், தூதரின் தனிப்பட்ட தொடர்பு விவரங்களும் அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 இதேவேளை அனோஜன் சிவராசா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சவூதி சிறை அதிகாரிகள் அவரது நலனில் உரிய கவனம் செலுத்தி வருவதாகவும் தூதரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், இந்தப் பயணத்தின்போது இலங்கைத் தூதர் தம்மாம் மத்திய சிறையின் பணிப்பாளர் மற்றும் சிறை மருத்துவருடனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!