சீனத் தூதுவருடன் விமல் வீரவன்ச சந்திப்பு – இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடல்!
#SriLanka
#Meeting
#Wimal Weerawansa
#LANKA4
#Ambassador
#discussion
#specialists
Riya
2 hours ago
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங்கின் விசேட அழைப்பின் பேரில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் இலங்கை – சீனா இடையிலான வரலாற்று ரீதியான நட்புறவு தொடர்பில் இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடியதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுபுன் அனுருத்த ஜயசிங்கவும் கலந்துகொண்டுள்ளார்.