இலங்கையில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று: 2025ஆம் ஆண்டில் 875 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

#SriLanka #Hospital #people #LANKA4 #report #community #HIV
Riya
2 hours ago
இலங்கையில் அதிகரிக்கும் எச்ஐவி தொற்று: 2025ஆம் ஆண்டில் 875 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வைத்தியர் சத்தியா ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 875 எச்ஐவி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தும் பழக்கம் காரணமாக எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் சி உள்ளிட்ட தொற்றுகள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எச்ஐவி தொற்றைக் கண்டறியும் வீதம் 56 சதவீதமாகவும், சிகிச்சை மருந்துகளைப் பெற்றுக்கொள்வோரின் வீதம் 52 சதவீதமாகவும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவோரிடையே ஹெபடைடிஸ் சி தொற்று 40 முதல் 50 சதவீதம் வரை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் அமைந்துள்ள 41 சிகிச்சை நிலையங்கள் ஊடாகப் பரிசோதனைகள், ஆலோசனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், மருத்துவமனைகளுக்குச் செல்லத் தயங்குவோருக்காகச் சமூக மட்டத்திலான மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன.

எனவே, போதைப்பொருள் பாவனையைத் தவிர்ப்பதுடன், பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதும், எச்ஐவி தொற்றுக்கான பரிசோதனைகளை உரிய முறையில் மேற்கொள்வதும் அவசியம் என சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!