நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் வானிலையில் மாற்றம்
#SriLanka
#weather
#Rain
#Meteorology
Thamilini
1 day ago
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சுமார் 75 மி.மீ வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான, உள்ளூர் ரீதியான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கப் பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை வேளையில் மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.