சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல்!

#SriLanka #LANKA4 #speaker #Opposition #confidence
Riya
2 hours ago
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல்!

சபாநாயகர் (டாக்டர்) ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (09) பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம கொறடா அஜித் பி. பெரேரா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் கரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், புதிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, திலிப் வேதாரச்சி, சமிந்த விஜேசிறி மற்றும் வருண லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

சபாநாயகருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!