‘தூய்மையான கொழும்பு’ திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல்!

#SriLanka #Colombo #Meeting #Department #Development #LANKA4 #President #waste
Riya
1 day ago
‘தூய்மையான கொழும்பு’ திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல்!

Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘Clean Colombo’ திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கொழும்பு நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கழிவுநீர் கட்டமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புனரமைத்தல், சுற்றுச்சூழலை அழகுபடுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவை இத்திட்டத்துடன் தொடர்புடைய பிரதான நிறுவனங்களாகும்.

மேலும், ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் சமூக நலன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை, கொழும்புக்கான ‘Clean Colombo’ திட்டத்துடன் ஒருங்கிணைப்பதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கொழும்பு நகரின் சுற்றுச்சூழல் தூய்மை, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!