முன்னாள் பிரதம நீதவான் திலின கமகேவை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்!
#SriLanka
#LANKA4
#service
#Case
#Office
#Court
#Chief
Riya
2 hours ago
மொரட்டுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் முன்னாள் பிரதம நீதவானுமான திலின கமகேவை நீதித்துறைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர், அவை நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் திலின கமகேவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, ஏற்கனவே அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது அவரை நீதித்துறைப் பதவியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.