போதைப்பொருட்கள் தொடர்பான சட்டமூலங்களை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் - நீதிமன்றம் அறிவிப்பு
#SriLanka
#Parliament
#drugs
#Court
Thamilini
1 hour ago
அபாயகரமான போதைப்பொருட்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின்' (Poisons, Opium and Dangerous Drugs Ordinance) கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு திருத்த சட்டமூலங்களைநாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்மானங்களை அறிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்மானங்களை அன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் சேர்க்குமாறும் டாக்டர் சாலிஹ் மேலும் பணித்தார்.