இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது பாராளுமன்றம் – மாலை வரை விவாதங்கள்!

#SriLanka #Parliament #today #LANKA4
Riya
6 hours ago
இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது பாராளுமன்றம் – மாலை வரை விவாதங்கள்!

பாராளுமன்றம் இன்று (09) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், மாலை 5.30 மணி வரை பல்வேறு பாராளுமன்ற நடவடிக்கைகளும் விவாதங்களும் இடம்பெறவுள்ளன.

இதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையான கட்டளைகள் 22 இன் 1 முதல் 6 வரையிலான பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைகளை எதிர்பார்க்கும் கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையான கட்டளைகள் 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதனையடுத்து, மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!