இன்றைய வானிலை - நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யும்

#SriLanka #weather #Rain #Warning #Meteorology
Thamilini
2 hours ago
இன்றைய வானிலை - நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கு மேல் மழை பெய்யும்

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய  மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் உள்ள சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. 

மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிமூட்டமான சூழல் நிலவ வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் மேலும் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!