அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் வட் வரி விகிதத்தை குறைக்க இலக்கு - ஜனாதிபதி அறிவிப்பு!

#SriLanka #AnuraKumaraDissanayake #Tax #Vat
Thamilini
2 hours ago
அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் வட் வரி விகிதத்தை குறைக்க இலக்கு - ஜனாதிபதி அறிவிப்பு!

அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் மதிப்பு கூட்டு வரி (VAT) விகிதங்களைக் குறைப்பதன் மூலம், வரி விகிதங்களைக் குறைக்கவும் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கிராம உத்தியோகத்தர் சேவையின் மூன்றாம் தரத்திற்குத் (Grade III) தெரிவான 1,540 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திப் பாதையானது கிராமப்புற சமூகங்களை நகரங்களுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டதல்ல; மாறாக, கிராமங்களிலேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதையும் வசதிகளை வழங்குவதையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார். 

கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே நன்கு அபிவிருத்தி செய்யப்பட்ட வீதி வலையமைப்பு, சிறந்த தகவல் தொடர்பு கட்டமைப்பு மற்றும் திறமையான, வலுவான பொதுச் சேவையை நிறுவுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுச் சேவையை மிகவும் மதிக்கும் அரசாங்கமாகத் தற்போதைய அரசாங்கம் திகழ்வதாகவும், அரச ஊழியர்களுக்குச் சிறந்த சம்பள விகிதம் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதனாலேயே, மிகவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அடிப்படைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என்றும் அவர் விளக்கினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!