பணம் தூய்தாக்கல், பயங்கரவாத நிதியளிப்பை தடுக்கும் மதிப்பீடு: இலங்கை தீவிர முன்னேற்பாடு

#SriLanka #LANKA4 #President #AnuraKumaraDissanayake #discussion
Abi
2 hours ago
பணம் தூய்தாக்கல், பயங்கரவாத நிதியளிப்பை தடுக்கும் மதிப்பீடு: இலங்கை தீவிர முன்னேற்பாடு

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் (AMLCFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளவுள்ள மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

2026 ஒக்டோபர் 26 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மதிப்பீட்டுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இதனுடன் தொடர்புடைய பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டங்களை கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமைச்சு மற்றும் நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

மதிப்பீட்டு செயன்முறையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் முழுமையான பங்களிப்பை வழங்குமாறு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.

அத்துடன், இச்செயன்முறைக்காக கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!