03 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எவரும் சிறை சீருடைகளை அணிந்தே நீதிமன்றன்றத்தில் முன்னிலையாக வேண்டும்!

#SriLanka #Prison #Court
Thamilini
2 hours ago
03 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எவரும் சிறை சீருடைகளை அணிந்தே நீதிமன்றன்றத்தில் முன்னிலையாக வேண்டும்!

சிறைச்சாலை விதிமுறைகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எவரும், சிறைச்சாலையால் வழங்கப்படும் சிறை சீருடைகளை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சிறை ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான செனக பல்லேதன தெரிவித்துளு்ளார்.

ஞானசார தேரரின் காவி உடை பறிக்கப்பட்டு சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய விடயம் பேசுபொருளாகியதை தொடர்ந்து அவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் பேசிய  அவர்,  "சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் சிறைச்சாலை உடைகள் குறித்து பல்வேறு சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாகக் காணப்படுகிறது. 

 சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, ஒரு பௌத்த பிக்குக்கு மாண்புமிகு நீதிமன்றத்தால் எளிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அவர் சிறையில் தனது தண்டனைக் காலத்தை அனுபவிக்கும்போது தனது அங்கியை அணியலாம். தண்டனை கடுமையாக இருந்தால், எந்தவொரு நபரும் சிறைச்சாலை உடைகளை அணிய வேண்டும். 

 சிறைச்சாலையால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை மாண்புமிகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, ​​அவரது தண்டனை மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், சிறை கண்காணிப்பாளர், தண்டனைக்கு முன்பு அவர் அணிந்திருந்த சாதாரண உடைகளை மாண்புமிகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதிக்கலாம். 

அத்தகைய நிலையில், ஒரு பிக்கு அங்கியை அணியவும் அனுமதிக்கப்படலாம். இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை மாண்புமிகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, ​​அவர்கள் தங்களது சிறைச்சாலை உடைகளை அணிந்தபடியே  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும்."

 மேலும், தீவு முழுவதும் உள்ள சிறைகளில் 63-க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பதையும், அவர்கள் சிறை அங்கிகளை அணிந்தே சிறையில் உள்ளனர் என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!